தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும்போது வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 12, 2021

தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும்போது வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

(இராஜதுரை ஹஷான்)

தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும்போது வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகையை 12 இலட்சத்தில் இருந்து 25 இலட்சமாக அதிகரிக்க தொழிற்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2003 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும்போது சலுகை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தொழிலாளர்களின் சேவை முடிவுறுத்தும்போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகை தீர்மானிப்பதற்கான சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய தொழில் உறவுகள் அமைச்சரால் கொண்டுவரப்பட்ட ஒழுங்கு விதிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் பணி புரிந்த காலத்தை கருத்திற்கொண்டு நட்டஈடு தீர்மானிக்கப்படும். 

அவ்வாறாயினும் குறித்த சூத்திரத்துக்கமைய கணிப்பிடும்போது ரூபா 1,250,000 இற்கு அதிகரிக்கப்படாத ஏற்பாட்டுக்கு குறித்த ஒழுங்கு விதிகளில் உள்வாங்கப்பட்டிருப்பதால் நியாயமற்ற வகையில் தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும்போதும், நிறுவனம் மூடப்படும் போதும், தொழிலை இழக்கும் போதும் உயர் சம்பளத்தை பெறும் பணியாளர்களுக்கு கிடைக்கும் நட்டஈடு குறைவாக இருக்கின்றமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தை கவனத்திற் கொண்டு செலுத்தப்பட வேண்டிய உயர்ந்தபட்ச நட்டஈட்டுத் தொகையை ரூபா 1,250,000 இலிருந்து ரூபா 2,500,000 தொழிற்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment