மேலதிக செயலாளர்களாக இராணுவ அதிகாரிகளை நியமிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, மாவட்ட செயலாளர்களின் அதிகாரம் குறையாது என்கிறார் அமைச்சர் கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

மேலதிக செயலாளர்களாக இராணுவ அதிகாரிகளை நியமிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, மாவட்ட செயலாளர்களின் அதிகாரம் குறையாது என்கிறார் அமைச்சர் கம்மன்பில

சகல அமைச்சுக்களுக்கும் மேலதிக செயலாளர்களாக இராணுவ அதிகாரிகளை நியமிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லையென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். 

மேலதிக செயலாளர்களை நியமிக்க அரசு தயாராகிறதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவ்வாறு எந்த திட்டமும் கிடையாது என்றார். 

கொரோனா தடுப்புக்கென 25 பிரிகேடியர்கள் நாடளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் இது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இராணுவம் தனது ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அனர்தங்களுக்கு முகங்கொடுப்பதில் இராணுவத்திற்கு பயிற்சி இருக்கிறது. 

இந்த நிலையிலே மாவட்ட செயலாளர்களின் ஒத்துழைப்பிற்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி தேவையாயின் இராணுவ தளபதியை தொடர்புகொள்ள தேவையில்லை. மாவட்ட செயலாளர்களின் அதிகாரம் இதனால் குறையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad