உருமாறிய கொரோனா பரவல் - லண்டனில் பாடசாலைகள் மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

உருமாறிய கொரோனா பரவல் - லண்டனில் பாடசாலைகள் மூடப்பட்டது

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்ப பாடசாலைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

அங்கு நேற்று ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது.

உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதால் இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் லண்டனில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இதனால் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் லண்டனில் உள்ள ஆரம்ப பாடசாலைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் கொரோனா அவசரகால வைத்தியசாலைகளை மீண்டும் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.

No comments:

Post a Comment