திருமலையில் மூன்று குளங்கள் உடைப்பெடுப்பு - யான் ஓயா தேகத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

திருமலையில் மூன்று குளங்கள் உடைப்பெடுப்பு - யான் ஓயா தேகத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் 18 சிறு குளங்களில் மூன்று குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ஜீ. சுஜிதரன் தெரிவித்தார்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலக்கந்தை குளம், கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஹாகல்லம்பத்த, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மடுவக்குளம் உடைப்பெடுத்துள்ளது.

அதனை நிர்மாணிக்கும் பணியில் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் இணைந்து திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதேவேளை கந்தளாய் பிரதேசத்தில் உள்ள பேரமடுவ மற்றும் மஹதிவுல்வெவ குளம் நிரம்பி வழிவதாக மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.கே.அப்துல் ஜப்பார் குறிப்பிட்டார்.

அத்துடன் யான் ஓயா நீர்த் தேகத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் இன்னும் இரண்டு கதவுகளை திறக்க உள்ளதாகவும் யான் ஓயா திட்டத்தின் பொறியியலாளர் ஜனக்க ரணசிங்க தெரிவித்தார்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad