இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் இராஜினாமா - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் அசந்தா டி மெல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதற்கு முன்னர் அவர் இலங்கை அணியின் முகாமையாளர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு கடந்த வருடம் டிசம்பரம் மாதம், 07 பேர் கொண்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

அண்மையில் நடந்து முடிந்த இரு டெஸ்ட் தொடர்களிலும் இலங்கை அணி தொடரை இழந்திருந்ததோடு, இறுதியாக இங்கிலாந்து அணியுடன் காலியில் இடம்பெற்ற இரு போட்டிகளையும் 2-0 என தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போதைய நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால குழுவொன்றை நியமிக்க தான் தயாராக இல்லை என விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு மேற்கொள்ளும் நிலையில், அமைச்சர் விளையாட்டில் கை வைப்பது போன்று நேரிடுவதால், அது அரசியலாகி விடும் எனவும் தெரிவித்ததோடு, விளையாட்டில் அரசியல் இடம்பெறக் கூடாது என தான் விரும்புவதாக சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad