பாடசாலைகளைவிட்டு வெளியேறிய மூன்று இலட்சம் பேருக்கு தொழில் பயிற்சி - அமைச்சர் சீத்தா அரம்பேபொல - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

பாடசாலைகளைவிட்டு வெளியேறிய மூன்று இலட்சம் பேருக்கு தொழில் பயிற்சி - அமைச்சர் சீத்தா அரம்பேபொல

இளைஞர்களின் தொழில் பயிற்சிக்கென அரசு 9900 மில்லியன் ரூபாவை ஒதுக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ள, தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீத்தா அரம்பேபொல, பாடசாலைகளை விட்டு வெளியேறிய மாணவர்கள் மூன்று இலட்சம் பேருக்கு, இந்நிதியைக் கொண்டு எதிர்காலங்களில் தொழில் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரிகளைப் பார்வையிடச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் இதுபற்றித் தெரிவித்துள்ளதாவது பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள் உட்பட பல்வேறு நிறவனங்களுக்கூடாக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதனை நோக்காகக் கொண்டுதான் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இயன்றளவு தொழில் பயிற்சிகளை வழங்கி இளைஞர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் படி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கமையவே மேற்படி ரூபா 9900 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வத்துகாமம் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad