இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்தவருக்கு புதிய வகை கொரோனா தொற்று - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்தவருக்கு புதிய வகை கொரோனா தொற்று

அண்மையில் இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வந்த ஒருவர், புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொற்று விஞ்ஞானப் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, நிர்ப்பீடனம், கல உயிரியல் தொடர்பான கற்கை பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் போதே குறித்த விடயம் தெரிய வந்துள்ளதாக, வைத்தியசர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ்  இங்கிலாந்தில் முதல் முதலாக உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad