கொழும்பில் மீண்டும் தொற்று பரவக் கூடிய வாய்ப்பு - அவதானம் தேவை என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

கொழும்பில் மீண்டும் தொற்று பரவக் கூடிய வாய்ப்பு - அவதானம் தேவை என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி)

கொழும்பில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமையால் அந்த பகுதிகளில் மீண்டும் தொற்று பரவக் கூடிய வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கொழும்பு வடக்கு மற்றும் மத்திய கொழும்பு பகுதிகளில் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதி வாழ் மக்களின் நடமாட்டம் தொடர்பில் சிவில் உடையில் பொலிஸார் கண்காணித்து வருகின்ற நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கடைப்பிடிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் நாம் ஏற்பனவே எச்சரிக்கை செய்திருந்த போதிலும் மீண்டும், இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் கொத்தனிகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசித்து வரும் மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும் .

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளும் தொடர்ந்தும் இடம்பெறும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad