அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமுல்படுத்தியது - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமுல்படுத்தியது

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வருகிறது.

மேலும் பல்வேறு விவகாரங்களில் சீனாவுடன் முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.‌ 

குறிப்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்து வருகிறார்.

பன்னாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் உட்பட பல சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. 

இது குறித்து சீன வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமுல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தின்படி வெளிநாட்டு சட்டங்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அத்துடன் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad