குடும்பச் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

குடும்பச் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

குடும்பச் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

திருமணம், விவாகரத்து, பிரிவு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் 1907ஆம் ஆண்டு 19ஆம் இலக்க திருமணம் பதிவு செய்தல் கட்டளைச் சட்டம் மற்றும் குடியியல் வழக்கு சட்டக்கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இக்கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் சமகாலத்துக்கு பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய குடும்பச் சட்டம் தொடர்பாக வேறு நாடுகளில் நடைமுறையிலுள்ள சட்ட நிலைமைகள் பற்றி குறித்த விடயம் சார்ந்த நிபுணத்துவக் குழுவின் மூலம் ஆய்வுகற்கைகளை மேற்கொண்டு விவாகரத்து, திருமண முடிவுறுத்தல், பிரிவு, விவாகரத்துக் கொடுப்பனவு, பிள்ளைகளின் பொறுப்பு மற்றும் சொத்துக்கள் பகிர்தல் போன்ற அனைத்து துறைகளுக்குமான குடும்பச் சட்டத்தின் சட்டமூலத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad