நாட்டை மூடி வீட்டில் இருக்க முடியாது என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

நாட்டை மூடி வீட்டில் இருக்க முடியாது என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டை மூடி வீட்டில் இருக்க முடியாது. நாம் அனைவரும் சுகாதார சட்டத்திட்டங்களுக்கு அமைய வாழ்வதற்கு தயாராகிக் கொள்ள வேண்டுமென விவசாத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலபிட்டி பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த கொரோனா வைரசுக்கு நாம் அனைவரும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றோடு பாடசாலைகளை திறக்க வேண்டும். கொரோனா தொற்று தொடர்பிலான சட்டத்திட்டங்களோடு நாம் இதனை மேற்கொள்ள வேண்டும்.

எமக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றம் திறக்க வேண்டியுள்ளது. தொற்றாளர்கள் அதிகரிப்பார்கள் அவர்கள் பிறகு குணமடைவார்கள். இதன் அனைத்திற்கும் முகம் கொடுத்து வாழ வேண்டியுள்ளது. இந்த சவாலை எதிர்நோக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டார்.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad