சமூக வலைத்தளங்களில் உலாவும் செய்திகள் அப்பட்டமான பொய் : மறுக்கிறார் ஹரீஸ் எம்.பி - News View

Breaking

Post Top Ad

Friday, January 15, 2021

சமூக வலைத்தளங்களில் உலாவும் செய்திகள் அப்பட்டமான பொய் : மறுக்கிறார் ஹரீஸ் எம்.பி

அபு ஹின்ஸா

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் என்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி சில செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவை அப்பட்டமான பொய்யான செய்திகள் எனவும் அந்த செய்திகளுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை எனவும் மறுக்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

அந்த செய்திகள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அந்த செய்திகளை என்னுடைய அரசியல் வாழ்வின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் முகவரியற்ற ஒரு சிலரே செய்திருக்கிறார்கள் என நம்புகிறேன். 

இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட பொய்யான பரப்புரைகளை கொண்டு அவர்களின் மீது இந்த சமூகத்திற்கு இருக்கும் அவநம்பிக்கையை திசை திருப்பி என்னுடைய அரசியல் நடவடிக்கைகளையே அல்லது மக்கள் என் மீதும் முஸ்லிங்களின் தாய் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கலாம் என நினைப்பது அவர்களின் முட்டாள் தனமாகும்.

இப்படியானவர்களுக்கு இறைவன் நல்ல சிந்தனைகளை கொடுத்து இனிமேலும் சமூகத்தை சீரழிக்கும் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என பிராத்திக்கிறேன் என்றார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad