திருகோணமலையில் 7 மாத பெண் குழந்தைக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

திருகோணமலையில் 7 மாத பெண் குழந்தைக்கு கொரோனா

நேற்று (8) திருகோணமலை நகர சபை பிரிவிற்கு உற்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் 16 பி.சி.ஆர் பரிசோதனையும் 41 துரித அன்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் 7 மாத பெண் குழந்தைக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 04 ஆம் திகதி சிறிமாபுரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசேதனையின் முடிவு நேற்று வெளியிடப்பட்டதில் அதில் சிறிமாபுர பிரதேசத்தில் 3ம் ஒழங்கையில் 53 வயது பெண்ணிற்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது

இதனையடுத்து அப்பெண்மணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் அன்டிஐன் பரிசோதனை நேற்று திருகோணமலை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் சையொழிபவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தொற்று உறுதியான பெண்மணியின் பேத்தியான 7 மாதக் குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை நிருபர் கீத்

No comments:

Post a Comment

Post Bottom Ad