வனப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் ஹெராயின் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

வனப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் ஹெராயின் மீட்பு

(செ.தேன்மொழி)

கொஸ்கொட பகுதியில் கைவிப்பட்டிருந்த 20 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, கொஸ்கொடவின் வனப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஹெரோயின் தொகையை இவ்வாறு மறைத்து வைத்தவர்கள் தொடர்பிலும், இதனை நாட்டுக்குள் கடத்தி வந்தவர்கள் தொடர்பிலும் இரகசிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் குறித்த ஹெரோயின் போதைப் பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை,தென் மாகாணத்திற்குள் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்புக்கமைய இதுவரையில் அண்ணளவானக 200 கிலோ கிராம் போதைப்பொருள் வரை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad