சீனாவில் சக்தி வாய்ந்த வெடிப்புச் சம்பவம் - ஒருவர் பலி, 20 பேர் காயம் - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

சீனாவில் சக்தி வாய்ந்த வெடிப்புச் சம்பவம் - ஒருவர் பலி, 20 பேர் காயம்

சீனாவின் மின்கலத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள நிங்சியாங் நகரில் அமைந்துள்ள மின்கலத் தொழிற்சாலையிலேயே இந்த சக்தி வாய்ந்த வெடிப்புச் சம்பவம் வியாழக்கிழமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் 6 பேர் பலத்த காயமடைந்தனர், 14 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக சீன ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமார் 36 தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் 288 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டடு, இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது, காயமடைந்தவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை, அதே நேரத்தில் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள காற்றின் தரம் சாதாரணமானது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad