சொகுசு பஸ்ஸில்18 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் - சாரதியை கைது செய்த பொலிஸார் - News View

Breaking

Post Top Ad

Friday, January 15, 2021

சொகுசு பஸ்ஸில்18 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் - சாரதியை கைது செய்த பொலிஸார்

கொழும்பு குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய மேற்கொண்ட சோதனையில் 18 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை காலியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் ஒன்றை கொஸ்கொடை, ஹேகல்ல பகுதியில் வைத்து சோதனையிட்டபோதே, குறித்த போதைப் பொருள் மீட்கப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹண தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதியை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

இந்தியாவுக்கு தப்பிச் சென்று அங்கு மரணித்ததாக தெரிவிக்கப்படும், திட்டமிட்ட குற்றங்களை மேற்கொள்ளும் பாதாள குழுத் தலைவரான அங்கொடை லொக்கா என அழைக்கப்படும் லசந்தா சமிந்த பெரேராவின் கீழ் பணிபுரியும் நபரான லெட்டி என்பரால் இப்போதைப் பொருள் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட போதைப் பொருளுடன் வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad