சிலாபம் - முன்னேஸ்வரத்தில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிலை கொள்ளை - News View

Breaking

Post Top Ad

Friday, January 1, 2021

சிலாபம் - முன்னேஸ்வரத்தில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிலை கொள்ளை

சிலாபம் - முன்னேஸ்வரம் குருணாகல் வீதியிலமைந்துள்ள மயான காளியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பஞ்சலோக எழுந்தருளி விக்கிரகம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி அதிகாலை 1.30 அளவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக ஆலயத்தின் பொறுப்பாளர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலயத்தின் உரிமை சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கிடையிலிருந்து வரும் தகராறு காரணமாக தொடரப்பட்டுள்ள வழக்கு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

ஒரு தரப்பினர் ஆலயத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட சிலை ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு சிலையொன்றும் திருப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad