பொதுஜன பெரமுனவின் ஒருங்கினைப்பாளர் எனக் கூறி மோசடி - கிழக்கிலே அதிகம் என்கிறார் சாகர காரியவசம் - News View

Breaking

Post Top Ad

Monday, December 7, 2020

பொதுஜன பெரமுனவின் ஒருங்கினைப்பாளர் எனக் கூறி மோசடி - கிழக்கிலே அதிகம் என்கிறார் சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்) 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் எனக் கூறி சிலர் மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். பொதுஜன பெரமுனவின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் எவரும் எம்மாவட்டத்துக்கும் நியமிக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், பொதுஜன பெரமுனவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எனக்கூறி தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக ஒரு சிலர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள். 

இவ்வாறான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இவ்விடயம் குறித்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கடந்த மாதம் 30 ஆம் திகதி முறைப்பாடளித்துள்ளோம். 

பொதுஜன பெரமுனவின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் என எவரும் எம்மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டவில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad