குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் படங்கள் விபரங்கள் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்படும் - அமைச்சர் சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Sunday, December 13, 2020

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் படங்கள் விபரங்கள் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்படும் - அமைச்சர் சரத் வீரசேகர

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் விபரங்களை பகிரங்கப்படுத்தவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வன்முறை கொள்ளை தாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படுபவர்களின் படங்கள் விபரங்களை ஊடகங்களிற்கு எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதை உறுதி செய்வதற்காகவும் இதன் காரணமாக ஏற்பட்ட அவமானத்தினாலும் அச்சத்தினாலும் குற்றவாளிகள் மீண்டும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்துவதற்காகவுமே படங்கள் விபரங்களை பகிரங்கப்படுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள் தொடர்பில் எவரும் 118 இலக்கத்தினை தொடர்புகொள்ள முடியும் நாங்கள் தற்போது குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad