தேசிய கொள்கை வகுக்கவும், ஆரம்ப பாடசாகைளை ஒழுங்குபடுத்தவும் நிபுணர் குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 8, 2020

தேசிய கொள்கை வகுக்கவும், ஆரம்ப பாடசாகைளை ஒழுங்குபடுத்தவும் நிபுணர் குழு நியமனம்

தேசிய கொள்கை வகுக்கவும், நாட்டில் ஆரம்ப பாடசாகைளை ஒழுங்குபடுத்தவும் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த த சில்வா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் பேசிய அவர், குறித்த குழு தொகுத்த அறிக்கை இந்த மாதம் 11 ஆம் திகதி கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். 

பாராளுமன்ற உறுப்பினர் பீ.வை.ஜீ. ரத்னசேக்கர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்த அவர், ஆரம்ப பாடசாலை முறையை சீரமைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

கொவிட்-19 நெருக்கடியால் 45,182 க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அநேகர சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சில முன்பள்ளி ஆசிரியர்கள் பிற வேலை வாய்ப்புகளை நாடுகிறார்கள். எனவே முன்பள்ளி முறையில் ஈடுபடுவோருக்கு மாற்று வழிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment