அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது - ட்விட்டரில் மனோ MP - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது - ட்விட்டரில் மனோ MP

அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் மீண்டும் சூடு பிடிப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தனது அதிகாரபூர்வ ட்விற்றர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மறக்கப்பட்ட தமிழ் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரம் தொடர்பில் அமைச்சர்களான நாமல் ராஜபக்சவிடம் யாழ்ப்பாணத்திலும், டக்ளஸ் தேவானந்தாவிடம் மட்டக்களப்பிலும் ஊடங்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகள் விவகாரம் குறித்து ஊடகங்களினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாலும், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் எழுதியுள்ளதன் மூலமாகவும் தற்பொழுது அரசியல் கைதிகளை விடுதலை செய்வது சூடு பிடிக்கிறது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad