இயந்திரக் கோளாறினால் யாழில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

இயந்திரக் கோளாறினால் யாழில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

யாழ்ப்பாணம், வடமராட்சி மாமுனைப்பகுதியில் இந்திய மீனவர்கள் நால்வர் நேற்றிரவு (09) இரவு 8.00 மணியளவில் கரையொதுங்கியுள்ளனர்.

இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகில் தொழிலுக்காகச் சென்ற நிலையில், ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் எரிபொருள் தீர்ந்த நிலையிலும் தாம் கரையொதுங்கியதாக, குறித்த இந்திய மீனவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த குறித்த நான்கு மீனவர்களும் வடமாராட்சி, மாமுனை பகுதியில் கரையொதுங்கிய பின்னர், தாமாகவே சென்று இலங்கை கடற்படையினரிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற இலங்கை கடற்படையினர், இவர்களை பொலிசாரிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி நிருபர் - முருகையா தமிழ்செல்வன்

No comments:

Post a Comment

Post Bottom Ad