இரு நாட்களுக்கு புகையிரதங்கள் இயங்காது - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

இரு நாட்களுக்கு புகையிரதங்கள் இயங்காது

வார இறுதி நாட்களான எதிர்வரும் இரு தினங்களுக்கு பயணிகள் புகையிரதப் போக்குவரத்து இடம்பெறாது என, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (21) மற்றும் நாளை மறுநாள் (22) ஆகிய இரு தினங்களில், பயணிகள் புகையிரதங்கள் எதுவும் இயங்காது என, திணைக்களத்தின் பொது முகாமையாளர் எம்.ஜே.டி. பெனாண்டோ இது தொடர்பில் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வாரமும், வார இறுதியில் (14-15) புகையிரதங்கள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad