தோணி கவிழ்ந்து குடும்பஸ்தர் பலி - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

தோணி கவிழ்ந்து குடும்பஸ்தர் பலி - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சம்பவம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

திகிலிவெட்டை ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை மாலை 21.11.2020 இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் 8 பிள்ளைகளின் தந்தையான திகிலிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து உதயச் சந்திரன் (வயது 51) என்பவரே பலியாகியுள்ளார்.

இவர் மாவடிமுனையிலிருந்து, முறக்கொட்டாஞ்சேனை ஊருக்கு வரும் நோக்கில் திகிலிவெட்டை ஆற்றை தோணியின் மூலம் கடந்து கொண்டிருக்கும்போது தோணி கவிழ்ந்துள்ளது.

தோணி கவிழ்ந்த நிலையில் ஒருவர் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவரைக் காப்பாற்றும் நோக்கில் விரைந்துள்ளனர்.

எனினும் அவர் உதவிக்கு விரைந்தவர்கள் நீரில் மூழ்கியவரை நெருங்கியபோதும் அவரது சடலத்தையே மீட்க முடிந்துள்ளது.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை சடலம் பிரேதக் கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad