நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்) 

நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய அடுத்த வருடம் முதல் செயற்படுத்தப்படவுள்ள 'அழகிய கிராமம்' திட்டத்திற்கென 5.3 பில்லியன் நிதி வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, நுண்கடன் மற்றும் தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 100 சமுர்த்தி பயனாளர்களுக்கு 27 மில்லியன் பெறுமதியான வணிகக்கடன் மற்றும் தொழில்சார் உபகரணங்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை மத்திய நுவரகம பிரதேச செயலகப் பிரிவின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. 

இதன்போது 2 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் வரையில் சமுர்த்தி கடன்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டெடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் உள்ள 5000 கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த 2021 ஆம் ஆண்டு தொடக்கம் அழகிய கிராமம் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு 5.3 பில்லியன் நிதி வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைவான வட்டி வீதத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு வணிகக் கடன்களை வழங்குமாறு நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment