தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து வெளியேரியோர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து வெளியேரியோர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிகளை மீறி வெளிப்பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்ற பஸ் ஓட்டமாவடி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது ஓட்டமாவடியில் இருந்து வெளிப்பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலைக்கு 32 தொழிலாளர்களை பஸ்சில் ஏற்றிச் செல்வதாக சுகாதார தரப்பினருக்கு கிடைத்த தகவலையடுத்து அதில் பயணம் செய்த அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில் நடைபெற்ற பரிசோதனையில் போது சுகாதார பரிசோதகர்கள் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment