பச்சை மீனை உண்டு உலகின் கவனத்தை ஈர்த்த முன்னாள் அமைச்சர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

பச்சை மீனை உண்டு உலகின் கவனத்தை ஈர்த்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் மீன் வள அபிவிருத்தி அமைச்சர் திலீப் வெதாராச்சி நாட்டில் மீன் விற்பனையை ஊக்குவிக்க பச்சை மீனை நேற்று சாப்பிட்டு முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

டெய்லி மெயில், த சன், இந்தியா டுடே, ஸ்கை நியூஸ், டெக்கான் ஹெரால்ட், யூ.எஸ்.நியூஸ் மற்றும் டெலிகிராப் உட்பட உலகெங்குமுள்ள செய்தி ஊடகங்கள் அமைச்சரின் இந்த நடவடிக்கையை அறிவித்ததுடன் சில ஊடகங்கள் இதை ஒரு விநோதமான செய்தி மாநாடு என வர்ணித்துள்ளன.

பேலியகொட மீன் சந்தையிலிருந்து கொவிட்-19 கொத்தணி கண்டறியப்பட்டதை அடுத்து மீன் மற்றும் கடல் உணவுகள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுவதாக பொதுமக்கள் பயந்ததன் விளைவாக நாடு முழுவதும் மீன் விற்பனை குறைந்தது.

இதேவேளை முன்னாள் அமைச்சர் மீன் சாப்பிடுவது பாதுகாப்பானது என்றும் கொவிட்-19 தொற்றால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளிக்க செய்தியாளர் மாநாட்டில் பச்சை மீனை சாப்பிட்டுக் காட்டியிருந்தமை தெரிந்ததே.

No comments:

Post a Comment

Post Bottom Ad