கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 4, 2020

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அதிகளவு குருதித் தேவை உள்ளதனால் குருதி கொடையாளர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக குருதிக் கொடையாளர்களின் வரவு கணிசமாக குறைந்துள்ளமையினாலே வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு நோய் நிலைகளில் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குருதி பக்கெற்றுக்கள் தேவைப்படுவதனால் குருதித் தானம் செய்ய முன்வரும் குருதிக் கொடையாளர்கள் பாதுகாப்பான முறையில் வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு வருகை தந்து குருதிக் கொடைகளை வழங்குமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(மண்டூர் குறூப் நிருபர் - பி. மோகனதாஸ்)

No comments:

Post a Comment

Post Bottom Ad