அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன், ரணில் அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும் - அமைச்சர் வியாழேந்திரன் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன், ரணில் அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும் - அமைச்சர் வியாழேந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடுக்காமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”இப்பொழுது சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் வாதப்பிரதிவாதங்களை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சரிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டதை கேலிகூத்தாக எடுத்து பேசி வருகின்றமையினை ஊடகங்கள் வாயிலாக எம்மால் அறிய முடிகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசலாம், பிரதமரிடம் பேசலாம், நீதி அமைச்சரோடும் பேச வேண்டும் கைதிகளின் விடுதலை தொடர்பில் நிதி அமைச்சருக்கும் பங்கு இருக்கின்றது, அவர் நாட்டினுடைய நீதித்துறைக்கு பொறுப்பானவர்.

300 க்கும் மேற்பட்ட உயிர்கள் பயங்கரவாத தாக்குதலால் கடந்த ஏப்ரல் 21 இல் வெடித்து சிதறி பலியாகினர். அந்தப் பயங்கரவாதத்தை தடுக்காமல் இருந்த அரசாங்கத்தை, மக்கள் விடுதலை முன்னணியினர் அந்நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்.

ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், பத்து அல்லது இருபது அரசியல் கைதிகளை விடுதலை செய்தால்தான் வாக்களிப்போம் என்ற நிபந்தனைகளை முன்வைத்து இருந்தால் கடந்த 4, 1/2 வருடங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைக்கான தீர்வினை கடந்த அரசாங்கத்திடமிருந்து எமது தமிழ் மக்களுக்காக பெற்றுக் கொடுத்திருக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad