அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் விடயங்கள் 'சதி முயற்சி' என்றே வர்ணிக்க வேண்டும் - மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் விடயங்கள் 'சதி முயற்சி' என்றே வர்ணிக்க வேண்டும் - மங்கள சமரவீர

(நா.தனுஜா)

அமெரிக்காவில் தற்போது டொனால்ட் ட்ரம்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் ஒரு 'சதி முயற்சியை' போன்று இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஆசியாவில் அல்லது ஆபிரிக்காவில் தேர்தலில் தோல்வியுற்ற தலைவர் ஒருவர் அதனை ஏற்க மறுத்திருந்தால் ஜனநாயக நாடுகளின் மத்தியிலிருந்து பாரிய கண்டனங்கள் வெளிப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது ஆசியாவிலோ அல்லது ஆபிரிக்காவிலோ தேர்தலின் பின்னர் ஒரு தலைவர் தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு மறுப்பாராக இருந்தால், அதற்கு எதிராக ஜனநாயக நாடுகளின் மத்தியிலிருந்து பாரிய கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களை ஒரு 'சதி முயற்சி' என்றே வர்ணிக்க வேண்டியிருக்கிறது. எனவே இப்போது அமெரிக்காவின் நட்பு நாடுகள் 'போதும்' (Enough is enough) என்பதை டொனால்ட் ட்ரம்பிற்கு வலுவாகவும் சத்தமாகவும் எடுத்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment