தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு சதமேனும் வழங்கப்படவில்லை - கபீர் ஹாசிம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு சதமேனும் வழங்கப்படவில்லை - கபீர் ஹாசிம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொராேனா தொற்று காரணமாக நாட்டில் தனியார் துறைகளில் பணிபுரியும் 60 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு சதமேனும் அரசாங்கம் நிவாரணமாக வழங்கவில்லை. அத்துடன் மக்கள் வாழ்க்கை செலவை கொண்டு செல்வதற்காக இதுவரை வங்கிகளில் அடகு வைத்திருக்கும் தங்க ஆபரணங்களின் பெருமதி 643 பில்லியன் ரூபாவாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2020ஆம் வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தனியார் துறையில் 60 இலட்சம் பேர் தொழில் செய்கின்றனர். அவர்களில் விவசாயம் அல்லாத துறைகளில் 28 இலட்சம் பேர் தொழில் செய்கின்றனர். இதில் 60 வீதமானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்பவர்கள்.

அதாவது நாளாந்த சம்பளத்துக்கு தொழில் செய்பவர்கள். நாட்டில் கொராேனா தொற்று நிலைமை ஏற்பட்ட பின்னர் இவர்களில் அதிகமானவர்களுக்கு, அவர்களின் சம்பளத்தில் பல்வேறு வீதத்தில் குறைப்பு செய்யப்பட்டிருக்கின்றது. சிலரை தொழில் இருந்து நீங்கி இருக்கின்றது. 

முதல் காலாண்டிலே ஒரு இலட்சம் பேர் வரை தொழில்களில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாக அரச நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறு தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசாங்கம் ஒரு சதமேனும் வழங்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment