புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் - உலக வங்கி - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 3, 2020

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் - உலக வங்கி

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது.

அந்த வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹேய்டட் சர்வோஸ் நேற்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கையும் - உலக வங்கியும் பல வருடங்களாக பரஸ்பர நம்பிக்கையுடன் செயற்பட்டு வருவதாக சர்வோஸ் சுட்டிக்காட்டினார். 

தற்போதைய தொற்றுப் பரவலை விரைவில் கட்டுப்படுத்த இலங்கையால் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad