சோளத்தை அழிக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

சோளத்தை அழிக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு

ருத்ரா

சோளத்தை அழிக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முகமாக விவசாயத் திணைக்களம், விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நடமாடும் சேவை நிகழ்வு வாகரை பிரதேசத்தில் இன்று (18) நடைபெற்றது.

சோளத்தினை பிரதானமாக பாதிக்கும் படைப்புழுவானது மேலும் 100 வகையான பயிர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டதால் அதில் இருந்து உப உணவு பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் தயாராக வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு தகவல் வழங்கப்பட்டது.

வீடு வீடாக சென்று துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், சுவரொட்டி மூலமும் விளம்பரப்படுத்தப்பட்டது. அத்துடன் படைப்புழு தாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தாக்கத்தில் இருந்து பாதுகாக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நடவடிக்கையானது வாகரை பிரதேசத்தில் கல்லரிப்பு, கதிரவெளி, குகநேசபுரம் போன்ற விவசாய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி. பேரின்பராஜா, வடக்கு விவசாய உதவி விவசாயப் பணிப்பாளர் சி. சித்திரவேல், விவசாய போதனாசிரியர்களான இ. பிரபாகரன், ஜீ. விஜிதரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad