தேர்தல் முடிவுகள் விசித்திரமாக உள்ளன - வாக்கு எண்ணிக்கை குறித்து ட்ரம்ப் அதிருப்தி - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

தேர்தல் முடிவுகள் விசித்திரமாக உள்ளன - வாக்கு எண்ணிக்கை குறித்து ட்ரம்ப் அதிருப்தி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மிகவும் விசித்திரமாக உள்ளதாக ட்ரம்ப் ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 237 இடங்களிலும், ட்ரம்ப் 213 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

பெரும்பான்மையை பெற 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடிக்கிறது. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து ட்ரம்ப் ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

அவர் பதிவிட்டுள்ளதாவது ‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மிகவும் விசித்திரமாக உள்ளன. அமெரிக்காவின் பல முக்கிய மாநிலங்களில் நேற்றிரவு நான் முன்னிலையில்தான் இருந்தேன். திடீரென சில வாக்குச்சீட்டுகள் எண்ணத் தொடங்கியதால் முடிவுகள் லேசாக மாறத் தொடங்கின’. என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment