இலங்கைக்கான எத்தியோப்பிய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

இலங்கைக்கான எத்தியோப்பிய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்கள் தூதரகத்தின் அவசர உதவிகளுக்கு அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் விசேட இலக்கங்களையோ அல்லது மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. 

டைக்ரே பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது எடுத்த முடிவைத் தொடர்ந்து, அங்கு ஆறு மாதங்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் இணையம், தொலைத் தொடர்புகள், தகவல் தொடர்புகள் மற்றும் டைக்ரே பிராந்தியத்துடனான போக்குவரத்து இணைப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் டைக்ரே பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களின் விவரங்களும் எத்தியோப்பியாவின் வெளியுறவு அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. 

அவர்கள் ஏதேனும் புதுப்பிப்புகளை செய்ய விரும்பினால் அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறத்தப்பட்டுள்ளது. 

அதன்படி தற்போது எத்தியோப்பியாவில் உள்ள டைக்ரே பிராந்தியத்தில் உள்ள இலங்கையின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட எண் + (251) 941567804) அல்லது மின்னஞ்சல் ஊடாக அல்லது மின்னஞ்சல் (slemb.ethiopia@gmail.com) மூலம் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment