இலங்கை வரலாற்றில் மிகவும் சிறப்பான வரவு செலவு திட்டம் - அமைச்சர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

இலங்கை வரலாற்றில் மிகவும் சிறப்பான வரவு செலவு திட்டம் - அமைச்சர் பந்துல குணவர்தன

நாட்டின் மண் வளத்தில் தமது வாழ்வாதாரத்தை கொண்டுள்ள மக்களுக்காக வரவு செலவு திட்டத்தை முன்வைத்த ஒரே ஒரு அரசாங்கம் சமகால அரசாங்கமாகும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது உள்ளுர் வளங்களிலும், மனித மூலதனத்திலும் நம்பிக்கை வைத்து, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறிமுறையைக் கொண்டதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று பாராளுமன்றத்தில் ஆரம்மான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு வருடம் போன்ற குறுகிய காலத்திற்குள் 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் இறக்குமதியை தடை செய்து நாட்டின் மண் வளத்தில் தமது வாழ்வாதாரத்தை கொண்டுள்ள மக்களுக்காக வரவு செலவு திட்டத்தை முன்வைத்த ஒரே ஒரு அரசாங்கம் சமகால அரசாங்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமே இதனை சாதித்துள்ளது.

பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது வரவு செலவு திட்ட உரையில், விவசாய துறையை முழுமையாக வரியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். 

நாட்டிற்குள் அனைவரும் செயல்பட கூடிய வகையில் வரவு செலவு திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார். எந்த வகையிலாவது திரட்டப்பட்ட பணத்தை உறுதிமொழி பிரகடனத்தின் மூலம் நாட்டிற்குள் பயன்படுத்த முடியும். அரசாங்கத்தின் காணிகளை பெற்று விவசாயத்தை மேற்கொள்ளவும் இந்த வரவு செலவுத் திட்டத்தன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

வர்த்தகத்துக்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தி நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டம் 2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டமாகும். இதேபோன்று தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கும், வர்த்தக முயற்சிகளை தொடங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

100 இலட்சம் ரூபா பணம் இருந்தால் அதனை வெளிப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் அதில் ஒரு இலட்சம் ரூபாவை மாத்திரமே பெற்றுக் கொள்ளும். இவ்வாறான புதிய வரி கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை வரலாற்றில் மிகவும் சிறப்பான வரவு செலவு திட்டம் இது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment