ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பம்

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. 

அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு திட்டத்தின் ஒரு பயிற்சிக் கட்டமாக தலைமைத்துவம் மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முக்கிய பயிற்சித் திட்டமாக, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையால் தெரிவு செய்ப்பட்டவர்களுக்கான 25 தொழில் துறைகளில் 06 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். 

அதன்படி இந்தப் பயிற்சிக்கு முன்னர் முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தத் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தால் 34,818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் தேசிய இளைஞர் படையணி இணைந்து இந்த பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. 

இந்தத் திட்டங்கள் நாடு முழுவதுமுள்ள தேசிய இளைஞர் படையணிகளிலும் பிராந்திய பயிற்சி மையங்களிலும் நடத்தப்படும்.

அதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இந்தப் பயிற்சித் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. 

அத்தோடு எதிர்காலத்தில் மற்றப் பிரதேசங்களிலும் தொடர்புடைய பயிற்சித் திட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என நைற்றாவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad