பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடவும் - யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பணிப்பு! - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடவும் - யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பணிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிக் கற்கைகளுக்கான பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பணித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த வணிகமாணி (பழைய பாடத்திட்ட) பரீட்சை முடிவுகள் தாமதமாவது குறித்து பரீட்சார்த்திகளினால் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து இடம்பெற்ற பல்கலைக்கழக மூதவைக் கூட்டத்தில் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் பணிப்பாளரிடம் துணைவேந்தர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் பற்றி பணிப்பாளர் மற்றும் கற்கை நெறி இணைப்பாளர் ஆகியோர் விளக்கமளித்தனர்.

உள்வாரியாக நடாத்தப்படும் பரீட்சைகளின் முடிவுகளை இரண்டு மாத காலத்தினுள் கையளிப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதே போலவே வெளிவாரிப் பரீட்சை முடிவுகளையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad