சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாய் பலி - News View

Breaking

Post Top Ad

Thursday, November 12, 2020

சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாய் பலி

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பிரதேசத்தில் மிருகங்களுக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (12) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், காளி கிட்னம்மாள் (65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த தாய் பூஜையின் நிமித்தம் வாழை இலை வெட்டுவதற்காக தோட்டத்திற்குச் சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் அவர் வராமையினால், வீட்டில் உள்ளவர்கள் தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது குறித்த தாய் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவர் மின்கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சடலம் நுவரெலியா நீதவானின் மேற்பார்வையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹட்டன் நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad