பஸ்களுக்கான மானியம் வழங்கும் தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

பஸ்களுக்கான மானியம் வழங்கும் தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

(க.பிரசன்னா)

கொவிட் 19 தொற்றால் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பஸ் போக்கு வரத்தாளர்களுக்கான மானியம் வழங்கும் தீர்மானத்துக்கு போக்கு வரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொவிட் 19 தொற்றால் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பஸ் போக்கு வரத்தாளர்களிடமிருந்து அறவிடப்படும் அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலுக்கான கட்டணம், தாமதக் கட்டணம், விலைமனுக் கோரல் கட்டணம், லொக் பத்திரக் கட்டணம், உள்நுழைதல் கட்டணம், அதிவேக நெடுஞ்சாலையின் தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணம் ஆகியவற்றை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இத்தொற்று மீண்டும் பரவுவதால் பேரூந்து போக்கு வரத்தாளர்கள் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதால், பயணிகள் போக்கு வரத்துச் சேவையை தரமாகவும் வினைத்திறனுடனும் வழங்குமுகமாக அவர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டுமெனவும் இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய இவ்வருட இறுதி வரைக்கும் தொடர்ந்தும் இம்மானியங்களை பஸ் போக்கு வரத்தாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad