எதிர்த்தரப்பினரது ஆதரவு இல்லாமல் வரவு செலவு திட்டத்தை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவோம் - சாகர காரியவசம் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

எதிர்த்தரப்பினரது ஆதரவு இல்லாமல் வரவு செலவு திட்டத்தை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவோம் - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்) 

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றிகரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்த்தரப்பினரது ஆதரவு இல்லாமல் வரவு செலவு திட்டத்தை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

அனைத்து அமைச்சுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நிதி செலவு தொடர்பில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்தவும், அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும் விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது அரச வருவாயில் பிரதான இலக்காக உள்ளது. அரசியல் தேவைகளை கருத்திற்கொண்டு புதிய வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படவில்லை.

நாட்டின் பொருளாதாரம் பலமிக்கதாக அமைய வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு 2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுபீட்சமான எதிர்கால கொள்கையின் திட்டங்கள் அனைத்தும் 5 வருட காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad