பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா - பதுளை மாவட்டத்தின் அனைத்து நீதிமன்ற வழக்குகளும் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா - பதுளை மாவட்டத்தின் அனைத்து நீதிமன்ற வழக்குகளும் இடைநிறுத்தம்

பதுளை மேல் நீதிமன்றின் வழக்கொன்றிற்கு ஆஜராகிய இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனால் பதுளை நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர், கொழும்பிலிருந்து பதுளை சென்று பதுளை மேல் நீதிமன்ற வழக்கொன்றிற்கு நேற்று ஆஜராகியிருந்தார்.

இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டத்தனால் அவர் உடன் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். அப்பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பதுளை மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், பசறை சுற்றுலா நீதிமன்றம், பதுளை தொழில் மன்றம் ஆகியவற்றின் கடமைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய பதுளை மேல் நீதிமன்ற வழக்குகள் அடுத்த மாதம் 18 ஆம் திகதியும் (18-12-2020) அதைத் தொடர்ந்த திகதிகளிலும் ஏனைய நீதவான் நீதிமன்ற வழக்குகள் அடுத்தமாதம் 15 ஆட் திகதியும் (15-12-2020), அதற்குப் பின்வரும் திகதிகளிலும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இத்தகவல்களை பதுளை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி கந்தசாமி இரமேஸ்குமார் தெரிவித்தார்.

மேற்கண்ட நீதிமன்றங்களின் வழக்குகள் அனைத்திற்கும் பதுளை சட்டத்தரணிகள் குழுவினரே ஆஜராவதனால், தொற்று அச்சுறுத்தலின் பாதுகாப்பு கருதி பதுளை நீதிமன்ற கடமைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரகசிய பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி பசறை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment