பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று (19), அவர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (19) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு வந்த அவர், பாராளுமன்ற அலுவலகத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு, 11.40 மணியளவில் அவை அமர்வில் கலந்து கொண்டார்.

9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான எம்.பிக்களினால் வரவேற்கப்பட்ட அவர், அவைக்குள் நுழைந்ததோடு, எதிர்க்கட்சி எம்.பியான திஸ்ஸ அத்தநாயக்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, யதாமினி குணவர்தன எம்.பி ஆகியோருடன் கருத்துகளை பரிமாறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad