கொங்கோவில் கட்டுக்குள் வந்தது எபோலா தொற்று - பாதிக்கப்பட்ட 119 பேரில் 55 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

கொங்கோவில் கட்டுக்குள் வந்தது எபோலா தொற்று - பாதிக்கப்பட்ட 119 பேரில் 55 பேர் பலி

கடந்த 5 மாதங்களாக கொங்கோவில் பரவி வந்த எபோலா நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா நோய்த் தொற்று பரவ ஆரம்பித்தது. 

இந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட 119 பேரில் 55 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. 

போதிய மருத்துவ வசதிகள், தடுப்பூசிகள் பயன்பாடு என நோய்த் தடுப்பு நடவடிக்கை மூலம் எபோலா நோயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

முந்தைய தொற்று நோய்களைப் போலவே, தடுப்பூசிகளின் பரவலான பயன்பாடு நோயைக் கட்டுப்படுத்த உதவியதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கொங்கோவில் எபோலா நோய்த் தொற்று பரவ ஆரம்பித்தது. இதுவரை கொங்கோவில் எபோலா பாதிப்பால் 2,277 பேர் பலியாகியுள்ளனர்.

No comments:

Post a Comment