50 பேர் தலை துண்டித்துக் கொலை - ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர செயல் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 12, 2020

50 பேர் தலை துண்டித்துக் கொலை - ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர செயல்

மொசாம்பிக் நாட்டில் கால்பந்து மைதானத்தில் வைத்து 50 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலைதுண்டித்து கொலை செய்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.ஸ். பயங்கர அமைப்பு, அதன் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம், அல்கொய்தா உட்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ், அல் ஷபாப் பயங்கரவாதிகள், பொதுமக்கள், பொலிசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கபா டெல்ஹடா மாகாணம் மகோமியா மாவட்டம் மவ்டிடி கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம் (10) நுழைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். 

மேலும், அந்த கிராமத்தில் இருந்த 50 க்கும் மேற்பட்டோரை இளைஞர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கால்பந்து மைதானத்திற்கு இழுத்து சென்றனர்.

அந்த மைதானத்தில் வைத்து தாங்கள் இழுத்துவந்த 50 க்கும் மேற்பட்டோரை தலை துண்டித்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூரமான முறையில் கொலை செய்தனர். 

கொல்லப்பட்டவர்களின் உடல்களை பயங்கரவாதிகள் அங்கும் இங்கும் என வீசி சென்றுள்ளனர். மேலும், சில பெண்கள், குழந்தைகளையும் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மொசாம்பிக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad