40 இற்கும் மேற்பட்ட சுற்றுலா ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 11, 2020

40 இற்கும் மேற்பட்ட சுற்றுலா ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்

40 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஹோட்டல்களுக்கு அடுத்த வாரம் பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கொவிட் 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் தமது தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆர்வமாகவுள்ள மற்றும் தமது அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. 

கொவிட் தொற்றுக்கு பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் தமது அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்புக்கு உகந்தது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்க அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad