தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ட்ரோன் கமராக்கள் களமிறங்கின - 15 பேர் கைது! - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ட்ரோன் கமராக்கள் களமிறங்கின - 15 பேர் கைது!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் பயணங்களை கண்காணிக்க விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் கமராக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் ட்ரோன் கமராக்களில் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விதிமுறைகளை மீறியதாக 15 பேர் ட்ரோன் கமெராக்களின் உதவியுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளாதாக அஜித் ரோஹன இன்று அறிவித்திருந்தார்.

இதன்படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், இடம்பெறும் பயணங்களைக் கண்காணிக்க இன்று முதல் விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு இணங்க பொதுமக்கள் செயற்படுகின்றார்களா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

No comments:

Post a Comment