மினுவாங்கொடையிலிருந்து வந்தவர்கள் வடக்கில் எங்கிருந்தாலும் உடனடியாக MOH ற்கு அறிவிக்கவும் - வட மாகாண ஆளுநர் - News View

Breaking

Post Top Ad

Friday, October 9, 2020

மினுவாங்கொடையிலிருந்து வந்தவர்கள் வடக்கில் எங்கிருந்தாலும் உடனடியாக MOH ற்கு அறிவிக்கவும் - வட மாகாண ஆளுநர்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்தவர்கள் வட மாகாணத்தின் எப்பகுதியில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் MOH ற்கு அறிவிக்கும்படி வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

கம்பஹா, மினுவாங்கொடை ப்ரண்டிக்ஸ் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் கொத்தணி, நாடு முழுவதும் பரவியிருக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய பலர் தங்களுடைய தகவல்களை மறைப்பதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பின் மிகக்கடுமையான சவாலை சமூகம் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

'கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணி புரிந்தவர்கள் அவர்களோடு தொடர்புடையவர்கள் யாரேனும் வட மாகாணத்தின் எப்பிரதேசத்தில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் MOH ற்கு தெரிவிக்குமாறும் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் வட மாகாண மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad