கடும் சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் ரிஷாட் - வீடியோ - News View

Breaking

Post Top Ad

Thursday, October 22, 2020

கடும் சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் ரிஷாட் - வீடியோ

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் பாராளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பொதுச் சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது.

எனினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதனால் அவருக்கு அனுமதி வழங்க முடியாதென சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் அவரை பாராளுமன்றுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad