தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இறுதி நிகழ்வு - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இறுதி நிகழ்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் இறுதி அங்கமான சிரமதான வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை 18.10.2020 இடம்பெற்றது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள மீராகேணி மையவாடி வீதியில் நுளம்பு பெருகும் இடமாக வீதி மருங்கில் இனந்தெரியாத நபர்களால் வீசப்படும் குப்பைகள் கூளங்கள் கொள்கலன்கள் அகற்றும் வேலைத்திட்டம் நடைபெற்றது.

இந்த சிரமதான விழிப்பூட்டல் நிகழ்வில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுச் சுகாதாரத்துறைப் பரிசோதர்கள் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை அலுவலர்கள் பிரதேச வாசிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் நுளம்பு பெருகக் கூடிய இடங்களும் துப்புரவு செய்யப்பட்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad